Rain Alert: முரசு புயல்; ``நாளை மாலைவரை கனமழைப் பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் சொல்வத் என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று (நவம்பர் 2) அதிகாலையிலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடித்தது.
சென்னையின் பல்வேறு இடங்களில் மழைகொட்டி தீர்த்தது. இன்று (நவம்பர் 2) அதிகாலையிலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை நீடித்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையிலும், சாலைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய மேற்கொண்டனர். இந்தப் பணிகளை வடக்கு, மத்திய, தெற்கு வட்டாரத் துணை ஆணையர்கள் நேரில் சென்று கண்காணித்தனர்.
இந்த நிலையில், நாளை மாலைவரை கடலோரப் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ``வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், நெல்லூர் - காவாலி கடற்கரைக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதையில் நகர்ந்து செல்லும் போது, புயலானது சென்னை கடற்கரைக்கு மிகவும் அருகில் கடக்க நேரிடும் என்பதால், இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயலின் நகர்வு காரணமாக வட சென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கடலோரப் பகுதிகள் மற்றும் கடலை ஒட்டிய இடங்களில் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை, புயலின் வெளிப்புற மழைக்கற்றைகளால் (outer rainbands) ஏற்படுபவையாகும். ஏற்கனவே இரண்டு சுற்றுகள் மழை பொழிந்துள்ள நிலையில், இடைவெளி விட்டு மேலும் பல சுற்று மழைக் கற்றைகள் நகரைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் சென்னைக்கு மிக அருகில் வரும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மாலை வரை மிகக் கனமழை பெய்யக்கூடும். புயலின் பாதையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், மழை பொழிவின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமாக மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதேபோல, வட சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி வரை சில இடங்களில் 150 மி.மீ வரை மிகக் கனமழை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.