`இதனை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்.! - கற்பகால பயணத்தை பகிரும் சமந்தா!
நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரையிலான தனது உடற்பயிற்சிகளை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
View this post on Instagram
இதுபற்றி சமந்தா ஏற்கெனவே தெரிவித்திருந்தது, "பல ஆண்டுகளாக எடை காக்கும் பயிற்சிகளை செய்து வருகிறேன். எனது மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பிறகே கர்ப்ப காலத்திலும் அதைத் தொடர்கிறேன். மேலும், எனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர். எனது உடல்நிலை மற்றும் கர்ப்ப காலத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் கர்ப்ப காலமும் மாறுபட்டது என்பதால், தனது உடற்பயிற்சி முறையை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்." எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.