Scene: ``நஸ்லெனை நான் ரொமான்டிக்கா பார்க்கல; அதனாலதான் அவர் வில்லன்... - இயக்குநர் ஜித்து மாதவன்
சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ``ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை அது, இது என நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. மூணு டீசர் ரிலீஸ் பண்ணிருக்கோம். ஒரு ட்ரைலர் ரிலீஸ் பண்ணிருக்கோம். அத மட்டும் பாருங்க. அதிலிருந்து உங்களுக்கு என்ன தோணுதோ அது தான் படம். மத்தபடி யாரும் பேசுறத கேக்காதீங்க. நவம்பர் 6 ம் தேதி தியேட்டர்ல வந்து பாருங்க.
நிறையா விசயங்கள் படபிடிப்பு தளத்துல தான் மாத்துவோம். ஒரு நாள் ஒரு சீன்ல சூர்யா சார் பேசவேண்டிய வசனம் எல்லாம் அப்படியே சேஞ்ச் பண்ணிட்டோம். சூர்யா சார் ஷூட்டுக்கு வந்து ரெடியாகி நின்னாரு. அப்போ தான் இந்த புது டயலாக் கொடுக்குறோம். நாலு பக்க டயலாக் இன்னைக்கு ஷூட் முழுவதும் இதுலையே போய்டும் ரொம்ப நேரம் ஆகும்னு நினைச்சேன். ஆனால் அத அவரு டப்பன்னு படிச்சிட்டு ஏதோ அவரே எழுதுன மாதிரி பேசுனாரு.
அவர் ரொம்ப எளிமையா பேசி நடிச்சு முடிச்சிட்டாரு. எல்லாருமே ரொம்ப ரொமான்டிக்கா பார்க்குற நஸ்லெனை, நான் ரொமான்டிக்கா பாக்கல. அதனாலதான் அவர் இந்தப் படத்துல வில்லன்" என நகைச்சுவையாக கூறி முடித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

