இன்றைய போட்டியிலும் வைபவ் இல்லை.. இந்தியா கொடுத்த டார்க்கெட்டை நோக்கி நியூசிலாந்து...
ஹேமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் (4) மற்றும் அபிஷேக் சர்மா (12) சீக்கிரமாகவே ஆட்டமிழந்தனர். இன்றைய போட்டியிலும் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இல்லாதது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது.
இருப்பினும், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 61 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் மற்றும் பிளேர் டிக்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 5.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பினன் ஆலன் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். தற்போது டிம் சீஃபர்ட் (37*) மற்றும் டேரில் மிட்செல் (14*) களத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


