Rain Alert: உருவாகும் முரசு புயல்- தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தெற்கு அந்​த​மான் கடல் பகுதி​யில் நிலை கொண்டுள்ள காற்​றழுத்​தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த புயலுக்கு இந்​தியா பரிந்​துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்​பட உள்​ளது.

புயல்

புயல் உருவாக இருக்கும் சூழலில் தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பதைப் பார்ப்போம்.

மழைத் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்," இன்று (நவ.1)வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

நாளை (நவ.2)நீலகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.