Omar Abdullah: ஊடகவியலாளரை மணந்த ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படங்கள்!

ஜம்மு & காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஊடகவியலாளர் நிதி ரஸ்தான் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இத்தகவலை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறார்கள்.

எக்ஸ் தளத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்த முதல்வர் உமர் அப்துல்லா, "நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். அதேவேளையில் நிதி ரஸ்தான், "இட்ஸ் டன் ப்ரோ எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை 31-ம் தேதி, உமர் அப்துல்லா மற்றும் அவரது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லா இடையே ஏற்பட்ட பிரச்சனைகளைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஒன்றாகப் பணியாற்றிய போது சந்தித்துக் கொண்ட உமர் அப்துல்லா மற்றும் பாயல் ஆகிய இருவரும் கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Omar Abdullah - Nidhi Razdan

இவர்களுக்கு ஜாஹிர் மற்றும் ஜமீர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு, தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக உமர் அப்துல்லா அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இவர்களது விவாகரத்து வழக்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் முடித்து வைத்தது. தற்போது நிதி ரஸ்தானை உமர் அப்துல்லா திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.