45 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் இஷான் கிஷான்.. எடுத்த ரன்கள் முட்டை...
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான டி20 போட்டியில், இந்திய அணி 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வைபவ் சூரியவன்ஷிக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டதற்கும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைத்ததற்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த போட்டியில் 45 ரன்கள் விளாசிய வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் 3 பந்துகளில் ரன் ஏதுமின்றிவெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிக எகிறும் தன்மை கொண்ட இந்த சிறிய மைதானத்தில் 150 ரன்கள் அடிப்பதே கடினம் என்னும் சூழலில், தொடரை ஏற்கனவே கைப்பற்றிய போதிலும் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காதது தவறு என சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய அணி இந்த போட்டியில் 120-130 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியடைந்தால், அதற்கு ஷ்ரேயாஸ் ஐயரின் தவறான கேப்டன்ஷிப்பே காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


