சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் கைகோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார்: ‘தர்மன்’ படத்தில் நயன்தாரா இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இளம் திறமைசாலி இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘தர்மன்’ (Dharman) குறித்து ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையுமே அதிர வைக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) பதாகையின் கீழ் மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இத்திரைப்படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். “THE AURA IS DOUBLE” என்ற மாஸான கேப்ஷனுடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு போஸ்டர், சமூக வலைதளங்களில் புயல் வேகத்தில் பரவி வருகிறது.
View this post on Instagram
ஏற்கனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’ மற்றும் ‘அண்ணாத்தே’ போன்ற படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நயன்தாரா, தற்போது ஐந்தாவது முறையாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ‘தர்மன்’ படத்தில் களமிறங்கியுள்ளது படத்தின் மீதான வணிக மதிப்பையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் அனிருத் இசை கூட்டணி என பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


