Rain Alert: தமிழ்நாடு முழுவதும் இன்று மழை! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? எங்கெங்கே பள்ளி விடுமுறை?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின்படி,

இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.

மழை

நேற்றைய கணிப்பின்படி,

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும்.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரியில் உதகை, கோத்தகிரி, குன்னூர், குந்தா தாலுகாக்களில் மட்டும், கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் தாலுகா பொரசக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னசேலம் தாலுகா ஈரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு மட்டும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் மட்டும்.

எங்கெங்கே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

புதுச்சேரி, காரைக்கால்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.