Chef Damu: தங்குறதுக்கு இடமில்லாம ரயில்வே ஸ்டேஷனில் தூங்குவேன் - செஃப் தாமு பகிர்வு | Rewind

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.

Chef Damu

கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராகக் கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விகடனுக்கு அவர் முன்பு அளித்த பேட்டியில் அவருடைய கரியரின் தொடக்க காலம் குறித்து அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், "ஆரம்பத்தில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கப் போறேன்னு சொன்னப்ப அம்மா விடல. எவ்ளோ சொல்லியும் கேட்காம பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரியில் சேர்த்தாங்க.

அது எனக்குப் பிடிக்கலைங்கிறதனால ஒழுங்கா காலேஜுக்குப் போகாம, படிக்காம இருந்தேன். பிறகு என் விருப்பப்படி ஹேட்டல் மேனேஜ்மென்ட்ல சேர்த்தாங்க.

மூன்று வருஷமும் கிச்சனில் கவனம் செலுத்தி கோல்டு மெடல் வாங்கினேன். படிக்கும்போதே சுதர்ஷன் இன்டர்நேஷனலில் டிரெயினிங்கிற்கும் போயிட்டு இருந்தேன்.

Chef Damu
Chef Damu

படிப்பு முடியும்போது கேம்பஸ் இன்டர்வியூ மூலமா பாம்பே தாஜ் ஹோட்டலில் வேலை கிடைச்சது. அங்க போகும்போது எனக்கு இந்தி தெரியாது. தங்குறதுக்கு இடமில்லாம ஹோட்டலில் ஒர்க் முடிச்சிட்டு வந்து ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிட்டு அங்கேயே குளிச்சி கிளம்பி மறுநாள் தாஜுக்கு வேலைக்குப் போவேன்.

இப்படியேதான் கொஞ்ச நாட்கள் இருந்துச்சு. மொழி தெரியாததனால அதுவும் சிரமமாக இருந்துச்சு. எல்லாவற்றுக்கும் பழகினேன்.

கொஞ்ச வருஷம் கழிச்சு சென்னைக்கு வேலைக்காக வரும்போது ஏற்கெனவே நிறைய அடி வாங்கிப் பழகிட்டதால இங்க எல்லாமே சுலபமாகிடுச்சு. அந்த இன்டஸ்ட்ரியில் கிட்டத்தட்ட 14 வருஷம் இருந்தேன். இன்னைக்குக் கவனிக்கப்படுற இடத்துல இருக்கேன்னா ஆரம்ப காலகட்டத்தில் அதுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன் என்று பேசியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.