Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?
மத்தியக் கிழக்கில் சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதிப் படைக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
மக்கா, மதீனா...
தற்போது சவூதியின் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்...
"பயங்கரவாத ஹூதிப் படையினரால் மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா பிராந்தியங்களை நோக்கி வீசப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகள் (ஷெல் துண்டுகள்) கீழே விழுந்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கா மற்றும் மதீனா முஸ்லிம்களின் புனிதத் தளங்களாகும்.
இதற்கு முன்பும், இந்த இரு தளங்களிலும் ஹூதிப் படை தாக்குதல் நடத்தியதாக சவூதி குற்றம்சாட்டியது.
புனிதத் தளங்களை வைத்து தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சவூதி புனைகிறது என்று தொடர்ந்து ஹூதி கூறிவருகிறது.
ஹூதி மறுப்பு
இப்போதும் சவூதியின் குற்றச்சாட்டை, "புனிதப் பகுதிகளான மக்கா மற்றும் மதீனாவைக் குறிவைத்து எங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக சவூதி பரப்புவது முற்றிலும் மிகப்பெரிய பொய்யாகும்" என்று ஹூதி அமைப்பின் ராணுவச் செய்தித்தொடர்பாளர் யாஹ்யா சரீ மறுத்துள்ளார்.
ஆனால், மக்கா மற்றும் மதீனாவில் விழுந்ததாகக் கூறப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகளின் புகைப்படங்களைத் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சவூதி பாதுகாப்புப் படை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


