BB Tamil 10: விஜய் சேதுபதி இல்லை... இந்த வாரம் இவர்தான் ஹோஸ்ட்டா?!

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனின் ஹோஸ்ட் நடிகர் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் புதிய சீசனின் அறிமுக நாள், இறுதி நாள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரம் போட்டியாளர்கள் எப்படி விளையாடினார்கள், என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்று ஹோஸ்ட் போட்டியாளர்களை வழிநடத்துவார்.

இந்த வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஆப்சென்ட் போலும்.

விஜய் டிவி, யார் அந்த BIGG HOST…? என்கிற கேப்ஷனோடு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

ரம்யா கிருஷ்ணன் | Ramya Krishnan

இந்த வாரம் விஜய் சேதுபதிக்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஹோஸ்டாக வார இறுதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளதாகத் தெரிகிறது.

ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஹோஸ்டாக வருவது புதிதல்ல.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வரை நடிகர் கமல்ஹாசன்தான் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்.

2021-ஆம் ஆண்டு கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, சீசன் 5-இல் ஒரு வார இறுதி எபிசோடுகளில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஹோஸ்டாகப் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.