`Meta AI Glass அணிந்து என்னை பார்க்க வந்தார் அந்த நபர்... - Sting Operation குறித்து DK சிவக்குமார்
கர்நாடகா அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடப்பதாக கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேர்காணல் ஒன்றில் அவருக்கு எதிரான ஸ்டிங் ஆபரேஷன் குறித்துப் பேசியுள்ளார்.
இது குறித்து அவர், “மெட்டா AI கண்ணாடியை அணிந்துகொண்டு ஒரு தொழிலதிபர் என்னைப் பார்க்க வந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் வந்ததால், அவருடைய பின்னணி குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டோம்.
கடவுள் எனக்கு ஒரு சிறப்புப் பவரைக் கொடுத்திருக்கிறார். ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே, அவர்கள் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்... அவர்களுடைய எண்ணம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். எனக்கு முகத்தைப் படிக்கத் தெரியும்.
வந்தவர் ஆரம்பத்தில் தொழில் சார்ந்த விஷயங்களைப் பேசினார். ஆனால் பின்னர் ஒரு தனி அறைக்குச் சென்று, லேப்டாப்பைத் திறந்து அரசியல் பற்றிப் பேசத் தொடங்கினார்.
என்னையும் கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியையும் சந்தித்தபோது அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திருந்தார். ஆனால் மற்ற முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தபோது அவர் அதை அணியவில்லை.
நான் அவர்கள் அனைவரையும் அழைத்து இந்தச் சம்பவம் குறித்த பதிவுகளைச் சேகரித்துள்ளேன். இப்போது அதை வெளியிடமாட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

