முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம்.. நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா...
நியூசிலாந்திற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 82 ரன்கள் விளாசினார். கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அசத்தினார்.
மேலும் நமன் திர் , கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.
அதிரடி அரைசதம் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

