காணாமல் போன சிறுமி; டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை - உதயநிதி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காணாமல் போனார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுமியைத் தீவிரமாக தேடி வருகின்றனர். காணாமல்போன சிறுமியை மீட்பதற்காக 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். எனினும், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

சிறுமி காணாமல் போய் கிட்டத்தட்ட 10 நாள்களாகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகர்வால் நேற்று புதன்கிழமை (21-10-26) உத்தரவிட்டாா்.

இந்நிலையில் இந்த சம்வம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், "செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு 11 நாட்கள் ஆகியும், அச்சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் இந்த அரசு திணறிக்கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

குழந்தையைக் கண்டுபிடிக்காத அரசையும் - காவல்துறையையும் கண்டித்து தி.மு.கழகம் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தரணிவேந்தன் தலைமையில் செஞ்சி ஆலம்பூண்டியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இராணிப்பேட்டையில் கூட இதே போல ஒரு குழந்தை காணாமல் போய் சுமார் ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தான் தமிழ்நாடு இருக்கிறது.

முதலமைச்சர் தன் Reels மோகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பிள்ளையை தொலைத்துத் தவிக்கும் அந்தக்குடும்பத்தின் வலியை உணர்ந்து, காணாமல் போன குழந்தையை உடனே கண்டறிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.