நாகை: சுற்றுலா வந்த இடத்தில் 2 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; 2 கேரள இளைஞர்கள் போக்சோவில் கைது

கேரளாவில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் ஒன்றாக வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். அந்தக் குழுவில் 26 வயதுடைய அஜய், 23 வயதுடைய விஷால் ஆகிய இரண்டு இளைஞர்களும் வந்திருந்தனர்.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பெற்றோர் மீதான கோபத்தில் அவர்களுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அஜய், விஷால்

நேற்று இரவு கடற்கரையில் இரண்டு சிறுமிகளும் நீண்ட நேரம் தனியாக நின்று பேசிக் கொண்டு நின்றுள்ளனர். இதைக் கவனித்த அஜய், விஷால் சிறுமிகளிடத்தில் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்து கோபத்தில் வந்ததைச் சொல்ல சிறுமிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி இருவரும் அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்துதான் பாலியல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

இளைஞர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்து சிறுமிகள் இருவரையும் தங்க வைத்துள்ளனர். பின்னர் இருவரும் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இரவு முழுவதும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்தச் சிறுமிகள் சத்தம் போட்டு கதறியுள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் வேளாங்கண்ணி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதையடுத்து விடுதிக்கு வந்த போலீஸார் சிறுமிகள் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அஜய், விஷால் இருவரும் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய், விஷால் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமிகள் இருவரையும் நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.