நான் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பாஜக-வின் ‘துரந்தரா? - விமர்சனங்களுக்கு அண்ணாமலை விளக்கம்

டெல்லி போராட்டம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ‘We The Leaders’ அமைப்பின் தலைமைச் சேவகர் அண்ணாமலை.

பாஜகவின் ‘பி-டீம்’... துரந்தர்

"நீட் தேர்வுப் போராட்டங்களின்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொண்டது முதல், என் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டின் கள நிலவரங்கள் மற்றும் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது முக்கியம் என்பதால் அவற்றை நான் கடந்து சென்றேன்.

ஒருவகையில் இது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில் நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ‘துரந்தர்’ என்றும் குத்தப்பட்ட முத்திரையை இது உடைத்தெறிந்தது.

அண்ணாமலை, மோடி

பாஜகவில் சிலருக்கு selective amnesia...

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சி.ஜே.பி (CJP) அமைப்பின் போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறை தடுப்புக் காவலில் வைத்த முறைகள் குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. பாஜகவில் உள்ள சிலருக்கு selective amnesia இருக்கலாம் என்பதால், நான் இதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். நான் ஜூன் 5, 2026 அன்றே பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.

நேற்று நான் குறிப்பிட்டது போல, சி.ஜே.பி-யின் வழிமுறைகளுடன் நான் உடன்படாமல் இருக்கலாம்.

ஆனால், தங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒரு பிரச்னையில் எதிர்ப்பு தெரிவிக்கவோ, விவாதிக்கவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?ஆம், நிச்சயமாக இருக்கிறது.

5 கேள்விகள்...

மத்திய அரசு இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் என்று நம்புகிறேன்.

1. போராட்டம் நடத்த அனுமதி கோரி சி.ஜே.பி கடிதம் வழங்கிய பிறகு, உள்துறை அமைச்சகத்தின் நிலையான உத்தரவின்படி ஜந்தர் மந்தர் போராட்டப் பகுதியிலிருந்து எவ்வாறு நீக்கப்பட்டது?

2. ஒருவரை முன்னெச்சரிக்கைத் தடுப்புக் காவலில் வைப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உதவி காவல் ஆணையருக்கு (ACP) ‘சிறப்பு நிர்வாக நடுவர்’ என்ற பெயரில் வழங்கும் ஒரு நடைமுறையை எவ்வளவு காலம் வைத்திருக்கப் போகிறோம்?

டெல்லி காவல்துறை தொடுத்த வழக்கின் விசாரணையை அதே டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் தலைமை தாங்கி நடத்துகிறார். இந்தக் காற்று எந்தப் பக்கம் வீசும் என்பது உங்களுக்கே புரியும்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

3. அக்டோபர் 13 அன்று ஜந்தர் மந்தரில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை மனு விசாரணைக்கு, அக்டோபர் 19 அன்று சிறப்பு நிர்வாக நடுவரான டெல்லி காவல்துறை உதவி ஆணையர் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வழக்கிலிருந்து விலகியது ஏன்? இது என்ன வேடிக்கையா?

4. 8 பிணைப் பத்திரங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை நின்றவர் சிறப்பு நிர்வாக நடுவரால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது ஏன்?

5. நீட் தேர்வுப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை மீறிய டெல்லி காவல்துறையினர் மீதோ அல்லது பெல்லட் துப்பாக்கி பயன்பாடு குறித்தோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

பாஜக நிபந்தனையை மீறவே இல்லையா?

முந்தைய காங்கிரஸ் மற்றும் ஆத்மி ஆட்சிக் காலங்களில் டெல்லியில் உள்ள எந்தவொரு பாஜக தொண்டரும் பிணை நிபந்தனைகளை மீறவே இல்லையா?

தடுப்புகளைத் தாண்டி உத்தரவுகளை மீறியபோதும் இதே டெல்லி காவல்துறைதானே அங்கிருந்தது? அப்போது அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள்? இதைப் போலவா?

தற்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தை அடைந்த பிறகு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சி.ஜே.பி நிர்வாகிகள் சிறப்பு நிர்வாக நடுவரால் விடுவிக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன்.

சி.ஜே.பி-யைப்காட்டி எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்க விரும்புகிறதா?

எனது கேள்வி மீண்டும் இதுதான்...

பாஜக சி.ஜே.பி-யை எதிர்க்கிறதா அல்லது அதற்கு இலவசமாக விளம்பரம் தருகிறதா? சி.ஜே.பி-யைப் பெரிய சக்தியாகக் காட்டி எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிக்க விரும்புகிறதா? இப்படிப் பார்த்தால், பணம் கொடுத்தாலும் சி.ஜே.பி-க்கு இதைவிடச் சிறந்த பி.ஆர் டீம் கிடைத்திருக்க முடியாது!

மத்திய அரசுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் அறிக்கைகளையும் ‘தேசவிரோதம்’ என்றும், ‘வெளிநாட்டு நிதியுதவி’ பெறுகிறது என்றும் முத்திரை குத்துவது மிகவும் அலுப்பாகவும் சலிப்பாகவும் இருக்கிறது.

மத்திய அரசு டெல்லியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு, தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள எப்போதும் ஒரு எதிரியைச் செயற்கையாக உருவாக்குகிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.