`26-ம் தேதி வரை மழை... இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்!

வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் தென் தமிழகப்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்பிருக்கிறது.

Rain Alert - மழை

மேலும் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பிருக்கிறது.

இது வலுவிழந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகரக்கூடும். அடுத்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தென் தமிழகப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுபகுதி வலுப்பெறும் வாய்ப்பு குறைவு என்பதால் ரெட் அலர்ட்டிற்கான வாய்ப்பும் குறைவு. இதன் தீவிரத் தன்மையைப் பொறுத்து ரெட் அலர்ட் கொடுப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.