“Virtual warriors எனச் சொல்லிக்கொண்டு, Virtual abusersகளை உருவாக்குவதா?” - மேயர் பிரியா கேள்வி

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாகக் கூறி, சென்னை கமிஷனரிடமும், சைபர் கிரைமிலும் புகாரளித்துள்ளார் சென்னை மேயர் பிரியா.

இந்தப் புகார் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாகத் தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?

Virtual warriors... Virtual abusers

ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு, Virtual abusersகளை உருவாக்குவது நியாயமா?

என்மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?

தவெக பெண்களுக்கு மட்டும்தான் மாண்பா?

கொள்கை ரீதியாக எதிர்க்காமல் இப்படி ஆபாச ரீதியாகப் பெண்களைச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? த.வெ.க-வைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் மாண்பு உள்ளதா?

இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக்கூடாது என்பது தான் த.வெ.க. அரசின் நிலைப்பாடா?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.