Rain Alert: சென்னை, திருவள்ளூர் பள்ளிகளுக்கு லீவ்! இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, வருகிற 26-ம் தேதி வரை, தமிழ்நாட்டில் அதிக கனமழை முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

எங்கெல்லாம் மழை?

சென்னை வானிலை மையத்தின் அப்டேட்டின்படி, இன்று (அக்டோபர் 21) காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,

மழை

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தமிழக மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

எங்கு விடுமுறை?

தொடர் மழையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.