‘அப்புறம் பாத்துக்கலாம்...’ - உங்களை ஏழையாக்கும் இந்தப் பழக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி?

நாம் யாருமே, “ஐயையோ, நான் முதலீடே பண்ண மாட்டேன்டா சாமி”ன்னு அடம் பிடிக்கிறதே இல்லை.

“அடுத்த மாசம் சம்பளம் வரட்டும்”, “தீபாவளி போனஸ் வரட்டும்”, “இன்சென்டிவ் கைக்கு வரட்டும்”, “மார்க்கெட் கொஞ்சம் கீழ இறங்கட்டும்”... இப்படி ஏதாவது ஒரு அல்ட்ரா-லாஜிக்கல் காரணத்தை வச்சு முதலீட்டைத் தள்ளிப்போட்டுகிட்டே இருப்போம்.

ஒரு மாசம்ங்கிறது ஒரு வருஷமாகும். ஒரு வருஷம் அஞ்சு வருஷமாகும். அப்புறம் ஒரு நாள், "ச்சே... அன்னைக்கே ஆரம்பிச்சிருக்கலாம், பொன்னான காலத்தையெல்லாம் கோட்டை விட்டுட்டோமே"ன்னு தலையில கை வச்சு உட்கார வேண்டியதுதான்.

Time

காலம் எனும் ‘சூப்பர் பவர்’!

நாம எல்லாரும் பணத்தை மட்டும்தான் சொத்துன்னு நினைக்கிறோம். ஆனா, ‘காலம்’தான் இருப்பதிலேயே பெரிய சொத்து!

ஒரு சின்னக் கணக்கு பார்ப்போம்.

ராம், ஷியாம்னு ரெண்டு நண்பர்கள். ரெண்டு பேருமே மாசம் 5,000 ரூபாய் முதலீடு பண்ண முடிவு பண்றாங்க.

ராம்: 25 வயசுலயே சுதாரிச்சு, சட்டுபுட்டுன்னு முதலீட்டை ஆரம்பிச்சிடுறார்.
ஷியாம்: "தம்பி, அப்புறம் பாத்துக்கலாம்!" அப்படின்னு 35 வயசு வரைக்கும் ஜாலியா இருந்துட்டு, அப்புறமா ஆரம்பிக்கிறார்.

ரெண்டு பேருமே 55 வயசு வரைக்கும் விடாம முதலீடு பண்றாங்க. வருஷத்துக்கு சராசரியா 10% ரிட்டர்ன் கிடைக்குதுன்னு வச்சுப்போம்.

55 வயசுல கைக்கு வர்ற தொகை:

சீக்கிரமா ஆரம்பிச்ச ராமுக்கு: சுமார் ₹1.13 கோடி!
லேட்டா வந்த ஷியாமுக்கு: சுமார் ₹38 லட்சம்!

10 வருஷம் முன்கூட்டியே ஆரம்பிச்ச ஒரே காரணத்துக்காக, ராமுக்குக் கிடைச்ச கூடுதல் லாபம் எவ்ளோ தெரியுமா? கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய்!

ரெண்டு பேருமே ஒன்னும் மலையைத் தூக்கி தலைமேல வைக்கல. மாசம் அஞ்சாயிரம்தான் போட்டாங்க. ஆனா, நடுவுல இருந்த அந்த 10 வருஷ ‘காலம்’தான் கேம் சேஞ்சர்!

SIP Savings

மார்க்கெட் ஏறுனா என்ன? இறங்குனா என்ன?

மார்க்கெட் மேல போனா, “அய்யோ, ரொம்ப அதிகமா இருக்கே, கொஞ்சம் கீழ இறங்கட்டும்”னு வெயிட் பண்ணுவோம். மார்க்கெட் கீழ விழுந்தா, “அய்யோ பயமா இருக்கே, கொஞ்சம் ஸ்டெடி ஆகட்டும்”னு ஓரமா போய் உட்காருவோம். அப்புறம் அது மேல ஏறுனதும், “ச்சே... அன்னைக்கே போட்டிருக்கலாம்”னு ஃபீல் பண்ணுவோம்.

சுருக்கமாகச் சொன்னா, முதலீடு செய்யாம தப்பிச்சு ஓட நமக்கு எப்போதுமே ஒரு சாக்குப்போக்கு ரெடியா இருக்கும்!

உண்மையை ஒத்துப்போம்... மார்க்கெட் எப்போ ஏறும், எப்போ இறங்கும்னு ஜோசியம் பார்க்க யாராலயும் முடியாது. அதுக்குத்தான் SIP (சீரான முதலீட்டுத் திட்டம்) இருக்கு. மார்க்கெட் டைமிங் பத்தி கவலைப்படாம, மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆட்டோ-டெபிட்ல போட்டுட்டு நம்ம வேலையைப் பாத்துட்டே இருக்கலாம்.

இந்தத் தீபாவளிக்கு உங்க வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றம்!

ஒவ்வொரு தீபாவளிக்கும் நாம புதுத் துணி எடுக்குறோம், பட்டாசு வாங்குறோம், சிலர் தங்கம் வாங்குறோம். தப்பே இல்லை! ஆனா, நம்ம கண்ணுக்குத் தெரியாத நம்ம எதிர்காலத்துக்காக என்ன வாங்குறோம்?

குழந்தைகளோட மேற்படிப்பு, நம்மோட ரிட்டயர்மென்ட், எதிர்பாராத மெடிக்கல் எமர்ஜென்சி, மாசாமாசம் சம்பளக் கவரை மட்டும் நம்பி வாழாத நிம்மதியான வாழ்க்கை... இதெல்லாம் தானங்க நிஜமான தீபாவளிப் பரிசு?

இந்தத் தீபாவளிக்கு, சிம்பிளா ஒரு மூணு வாக்குறுதி எடுப்போம்:

1. என் வருமானத்துல என் ஃபியூச்சருக்கும் ஒரு ஷேர் உண்டு!
2. என்னால முடிஞ்ச சின்னத் தொகையில இருந்தே இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணுவேன்.
3. மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும், என் இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன்!

Labham workshop on SIP Oct 21 2026

இந்தத் தீபாவளிக்கு வீட்ல தீபம் ஏத்துறதோட, உங்க எதிர்காலத்தை வளமாக்கும் SIP ஆரம்பிக்கணுமா?

செல்வம் பெருகிட, தீபாவளி 2026ல் SIP தொடங்குவது எப்படி?

உங்களின் இலக்கு நோக்கி அடியெடுத்து வைக்க மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SIP தொடங்குவது எப்படி? இது முதலீட்டிற்குப் புதியவர்களுக்கான அடிப்படை மாஸ்டர்கிளாஸ்... 

நடைபெறும் நாள்: அக்டோபர் 21, 2026, புதன்
நேரம்: மாலை 07 - 8:30 மணி - இந்திய நேரம்

100 பேருக்கு மட்டுமே அனுமதி: நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, முன்பதிவு செய்யவும்: https://labham.money/events/webinar-oct21-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct21_2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.