திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்! - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் ரணபலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் புரோமோ காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்த பல விஷயங்களை இந்தத் தம்பதி பகிர்ந்துள்ளனர்.

திருமணம் பற்றி இதில் ராஷ்மிகா மந்தனா, "நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சம்மதம் சொல்வதற்காக நான் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது" என்றார்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தொடர்ந்து இதற்கு பதில் தந்த விஜய் தேவரகொண்டா, "ஆம், உண்மையில்தான். நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக, என்னிடம் அவர் 100 முறையாவது கேட்க வேண்டும் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன்!" என ஜாலியாகப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.