BKU: எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை! - மமிதா பைஜூ

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய நாயகி மமிதா பைஜு, இப்பட வாய்ப்பு குறித்துப் பேசியிருக்கிறார்.

Bethlehem Kudumba Unit

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சக்சஸ் மீட்டில் மமிதா பைஜூ பேசுகையில், "சூப்பர் சரண்யா படம் ரிலீஸாகாத சமயத்திலேயே இயக்குநர் கிரிஷ் என்னிடம் இந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்தின் கதையைக் கூறினார்.

அப்போதே இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார். எந்த நம்பிக்கையில் அன்று இதனை சொன்னார் என்று எனக்கு இன்றும் தெரியவில்லை.

Mamitha Baiju
Mamitha Baiju

இன்று இந்தப் படத்தின் வெற்றி மேடையில் நிற்கும் நான், இயக்குநருக்கு நன்றி என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்புவதில்லை.

பிரேமலு, பெத்லஹேம் குடும்ப யூனிட் என என்னால் ஒரு முதன்மை கதாநாயகியாக நடித்துப் படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்று எனக்கே நம்பிக்கை இல்லாத ஒரு சூழலில், அவர் என் மீது தீவிர நம்பிக்கை வைத்தார். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்!" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.