ஈக்வடாரில் அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு! - Video

ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில், தேவாலயத்தில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் மீது பெரிய மரச் சிலுவை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

அக்டோபர் 17, 2026 அன்று, குவாயாகில் நகரில் உள்ள Nuestra Señora del Perpetuo Socorro தேவாலயத்தில் வழிபாடு நடைபெற்றது. அப்போது தேவாலயத்தின் பங்குத் தந்தையான ஃபாதர் பாட்ரிசியோ ஆல்ஃபிரெடோ சான்செஸ் மோலினாரி (Father Patricio Alfredo Sánchez Molinari) வழிபாட்டை நடத்திக்கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பெரிய மரச் சிலுவை திடீரென அவரின் மேல் விழுந்தது. இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. அங்கிருந்த வழிபாட்டாளர்கள் உடனடியாக அவருக்கு உதவ முயன்றனர்.

குவாயாகில் பேராயர் அலுவலகம் அக்டோபர் 18 அன்று பாதிரியாரின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அவர் கிறிஸ்தவ மதத்தின் Congregation of the Most Holy Redeemer என்ற மத அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்

வழிபாட்டின்போது நடந்த இந்த விபத்து, தேவாலயங்களில் பெரிய சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பொருத்துவதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.