Rain Alert: கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள் லிஸ்ட்; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 19) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, நீலகிரி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், லட்சத்தீவு பகுதியிலிருந்து தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா வழியாக மத்தியமேற்கு வங்கக்கடல் வரை, 1.5 கி.மீ முதல் 3.1 கி.மீ உயரம் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. வட உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 0.9 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டலச் சுழற்சி காணப்படுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளில் சுமார் 7.6 கி.மீ உயரம் வரை மற்றொரு வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைப் பெய்யக்கூடும்.
சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இடையிடையே ஓரிரு முறை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவுமிருக்காது. வெப்பநிலை இயல்பான அளவையொட்டியே இருக்கும். பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் வெளிப்புறப் பயணங்களின்போது விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


