AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை!

தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும், இனிமேல் அவற்றை உருவாக்கவோ, திருத்தவோ, பகிரவோ கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

“எனது முகத்தைப் பயன்படுத்தித் என்னைத் தவறாகச் சித்தரிப்பதையும், என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது முகத்தையோ, என்னை அடையாளப்படுத்தும் தோற்றத்தையோ பயன்படுத்துவதற்கு நான் அனுமதி அளிக்கவில்லை... இத்தகைய படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்கள், பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் எனப் பொறுப்பான ஒவ்வொருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பேன்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், போலி சமூக வலைதளக் கணக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொள்வதாலோ, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலோ பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் கூறியிருப்பவர், தனது பதிவின் இறுதியில், “உடனடியாக நீக்குங்கள். உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.