என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்
இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேவா இசையில் தான் ‘வாலி’, ‘குஷி’ என என்னுடைய வாழ்க்கையே தொடங்கியது. மிக அற்புதமான மனிதர்.
அவர் இன்னும் 10 வருடங்கள் இருந்திருக்கலாம். நல்ல மனிதர். யார் மனமும் கோணாமல் நடந்து கொள்ளும் மிகச்சிறந்த மனிதர்.
அவருடன் பணியாற்றிய என்னுடைய அனுபவம் மிகச் சிறப்பானது. பார்த்தால் தூங்கியபடி இருக்கிறார். மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர் மறைந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் என்னென்றும் நம்முடன் இருக்கும்.

என்னுடைய முதல் 2 படங்களுக்கு அவர் அளித்த பங்களிப்பை என்னால் மறக்கவே முடியாது. சிறந்த மனிதர், சிறந்த இசையமைப்பாளர்" என எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


