Deva: அஜித்தை பாட வைக்க முயற்சி பண்ணினேன்! - தேனிசை தென்றல் தேவா ஷேரிங்ஸ்
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்த விகடனுக்கு அவர் வெவ்வேறு சமயங்களில் அளித்த பேட்டிகளில் பல விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அஜித்தைப் பாட வைக்க முயற்சித்ததாகவும் முன்பு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
அவர், ``எஸ்.ஏ.சி சாரின் படங்களுக்கு நான் இசையமைத்தபோது விஜய் அடிக்கடி ரெக்கார்டிங்கிற்கு வருவார். அப்போதிருந்தே அவரை எனக்கு நல்லாத் தெரியும். அவர் ஹீரோ ஆனதுக்கு அப்புறம் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும்போது, அவரைப் பாட வைத்தேன். அவரையும் அவரின் அம்மா ஷோபாவையும் சேர்த்து டூயட் பாடல்களையும் பாட வைத்திருக்கிறேன்.

அதேமாதிரி அஜித்துக்கும் ஆசை’ படத்தில் ஆரம்பித்து ரெட்’ படம் வரைக்கும் பல படங்கள் பண்ணியிருக்கேன். விஜய்யைப் பாட வைத்த மாதிரி அஜித்தையும் பாட வைக்க முயற்சி செய்தேன். ஆனால், அவர் அதுக்குப் பிடி கொடுக்கவே இல்லை எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


