Deva: ‘மீசைய முறுக்கு-2’-வுக்காக அவருடன் உரையாடிய அனுபவங்கள் மறக்க முடியாதவை!- ஹிப் ஹாப் தமிழா ஆதி
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தேனிசைத் தென்றல் தேவாவை நடிக்க வைக்கவும் ஹிப் ஹாப் ஆதி முயற்சித்திருக்கிறார். தேவாவின் மறைவுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இரங்கல் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின்போதும், வெளியீட்டின்போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீபகாலத்தில் அவரோடு நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.
தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன். எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத்துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது. எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Hiphop Tamizha (@hiphoptamizha) October 17, 2026
எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத்துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த ஒருவரைத் தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.
எளிய மக்களின் இசையைத் திரையில் கொண்டு சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுகூரப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


