Jailer 2: வடமாநில மல்டிப்ளக்ஸ்களில் ரிலீஸாகாத ஜெயிலர் 2; ரசிகர்கள் கவலை; காரணம் என்ன?
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஆனால், வட இந்தியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
வட இந்தியாவில் உள்ள பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் போன்ற முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜெயிலர் 2 திரைப்படம் திரையிடப்படாததே ரஜினி ரசிகர்களின் கவலைக்குக் காரணம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஜெயிலர் 2 திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆனால், பாலிவுட்டில் திரையரங்க உரிமையாளர்களின் விதியின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும்.

ஆனால், திரைப்படம் நான்கு வாரங்களில் வெளியாகவிருப்பதால் பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் திரையரங்குகள் ஜெயிலர் 2 படத்தைத் திரையிட மறுத்துவிட்டன.
வட மாநிலங்களில் ஜெயிலர் 2 படத்தைச் சில குறிப்பிட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் ஒரு சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது என ரஜினி ரசிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


