Jailer 2: அதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது! - நடிகை அபெக்ஷா போர்வல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தின் முக்கிய ஆக்ஷன் காட்சியில் வந்து பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை அபெக்ஷா போர்வல்.
நேற்றைய தினம் இப்படம் வெளியாகியிருக்கும் நிலையில், வெரைட்டி இந்தியா ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் ரஜினியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அவர், "திரையில் சூப்பர் ஸ்டாராகக் கோலோச்சும் ரஜினி சார், நேரில் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமும், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.
இத்தனை ஆண்டு கால அனுபவமும், உலகளவில் இவ்வளவு பெரிய புகழும் இருந்தபோதிலும், ஸ்பாட்டிற்கு வந்துவிட்டால் முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவார்.

என்னிடம் ரொம்பவே அன்பாகப் பேசி, எனக்கு ஊக்கமளித்தார். திரையில் அவருடைய அந்த அசாத்தியமான மாஸ் மேஜிக்கை நேரிலேயே பார்த்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.
ஜெயிலர் 2 படத்தில் அவருடன் நடித்ததை என் திரைப் பயணத்தின் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


