டெல்லி காவல்துறை என்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும்,சிறை செல்லவும் நான்.!- அபிஜித் தீப்கே

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.

ஜந்தர் மந்தர்

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (அக்.14) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர்.

உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஐந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி மற்றும் மும்பையில் லேரா தோ திரங்கா (தேசியக் கொடியை ஏந்துவோம்) என்ற போராட்டத்தை சிஜேபி இன்று நடத்த இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜித் தீப்கே, " ஞானேஷ் குமார், நரேந்திர மோடிக்கு என்ன கொடுக்கிறார்? ரயில், மெட்ரோ உள்ளிட்ட சேவைகளை நிறுத்தி டெல்லியை முடக்கிவிட்டீர்கள். அனைத்து பாதுகாப்புப் படையையும் டெல்லியில் குவித்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை போல் டெல்லியை மாற்றிவிட்டீர்கள்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

இந்தப் போராட்டத்திற்கு முன்னதாக, டெல்லி காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும். உளவுத்துறை அதிகாரிகள் தன்னைக் கண்காணித்து வருகின்றனர். எண்களற்ற வாகனங்கள் தன் பின்னால் வருகிறது. நாட்டில் தேசியக் கொடியை ஏந்துவதற்காக சிறை செல்ல நேரிட்டாலும் அதற்குத் தான் தயாராகவே இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.