தனியார்மயமானது ஐ.டி.பி.ஐ வங்கி.. சுமார் ரூ.53000 கோடிக்கு வாங்கிய கனடா நிறுவனம்...
மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி வசம் பெரும்பான்மை பங்குகளுடன் இயங்கி வந்த ஐ.டி.பி.ஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை, கனடாவை சேர்ந்த பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திற்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு பங்கின் விலை 81 ரூபாய் வீதம், இந்த மொத்த பரிவர்த்தனை தொகை 52,877.07 கோடி ரூபாயாகும்.
இந்த விற்பனையில் மத்திய அரசின் 30.48% பங்குகளும், எல்.ஐ.சி-யின் 30.24% பங்குகளும் அடங்கும். ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்ததற்குப் பிறகு, இந்திய நிதித்துறையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய தனியார்மயமாக்கலாகவும், மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடாகவும் இது பார்க்கப்படுகிறது.
2017-ல் வாராக்கடன் காரணமாக ஆர்.பி.ஐ-யின் கண்காணிப்பில் வந்த இவ்வங்கியின் 51% பங்குகளை 2019-ல் எல்.ஐ.சி கையகப்படுத்தியது. பின்னர் 2022-ல் விருப்ப மனுக்கள் கோரப்பட்டு, 2026 ஜனவரியில் நிதி ஏலங்கள் கோரப்பட்ட நிலையில், தற்போது பேர்பேக்ஸ் நிறுவனம் வங்கியை கையகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கியின் கடன் வழங்கும் திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சர்வதேச போட்டித்தன்மை அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

