ஜெர்மனி: 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ; அதிர்ச்சியில் காவல்துறை - என்ன நடந்தது?

ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ ஒன்று தகாதமுறையில் நடந்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெர்மனியின் கொலோன் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே 16 வயது சிறுமி தன் தோழிகளுடன் நின்றுகொண்டிருந்தார். சுமார் 1.2 மீட்டர் உயரம் கொண்ட ரோபோ ஒன்று பின்புறமாக வந்து அவரிடம் தவறாக நடந்துள்ளது.

அந்த ரோபோவின் 16 வயது உரிமையாளரும், அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் சேர்ந்து இந்த நிகழ்வைப் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் நேரலையில் பகிர்ந்துள்ளனர்.

சிறுமி வன்கொடுமை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டறிந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Volkswagen காரின் டிக்கியில் அந்த ரோபோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ரோபோவையும் இரு சந்தேக நபர்களின் கைபேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த ரோபோ தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்டதா அல்லது யாராவது அதைத் திட்டமிட்டு அவ்வாறு செய்ய தூண்டினார்களா என்பது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இச்சம்பவத்தை ஒரு பாலியல் தொல்லை வழக்காகப் பதிவு செய்து, காவல்துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த ரோபோவை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.