கால்பந்து போட்டி போல் கிரிக்கெட்டில் தரம் பிரிக்க வேண்டும்: கவாஸ்கர் யோசனை...
சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளை வகைப்படுத்தும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
பலவீனமான நாடுகளுக்கு எதிரான டி20 போட்டிகளிலும், வலிமையான அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் பதிவு செய்யப்படும் சாதனைகளை ஒரே தராசில் வைப்பது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மங்கோலியா அணி வெறும் 13 ரன்களுக்கு சுருண்ட சம்பவத்தையே அவர் இதற்கு உதாரமாக குறிப்பிட்டுள்ளார். ஐசிசி முழு உறுப்பு நாடுகள் மோதும் போட்டிகளுக்கும், வளர்ந்து வரும் அசோசியேட் அணிகள் மோதும் போட்டிகளுக்கும் இடையே பந்துவீட்டாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் புள்ளிவிவரங்களில் பெரும் வேறுபாடு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கால்பந்து லீக்குகளில் உள்ளது போல, அணிகளின் தரத்திற்கு ஏற்ப பிரிவுகள் மற்றும் தரம் உயர்த்தும் முறையை கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் எந்த தரத்திலான போட்டிகளில் சாதனைகள் படைக்கப்பட்டன என்பதை தெளிவாக பிரித்து அறிய முடியும். மேலும், உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் பிளேட் க்ரூப் போன்ற பிரிவுகளில் அடிக்கப்படும் ரன்களையும் இதே அடிப்படையில் மறுஆய்வு செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


