சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் விருந்து; ரெடியான வெற்றிமாறன் அரசன் அப்டேட்

சிலம்பரசனின் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி இது. இந்த தீபாவளிக்கு சிம்புவின் அரசன் விருந்து ஒன்று காத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.

படப்பிடிப்பில்.

வெற்றிமாறன் ஒரே சமயத்தில் வடசென்னையின் உலகமான அரசன், ராஜன்வகையறா படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகிறார். இரண்டு படங்களையும் தாணு தயாரிக்கிறார். இதில் சிலம்பரசனுடன் ஆன்ட்ரியா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி, கிஷோர், விக்ராந்த், யோகிபாபு என பலரும் இருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். அரசனில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு, மற்றுமொரு அசத்தலான கெட்டப் என சிலம்பரசனுக்கு மூன்று கெட்டப்கள் இருக்கின்றன. படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் அரசன் கதை ஒன்-லைன் என் தெரிவித்திருந்தோம். இப்போது நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

சிம்பு

மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வரை ஷூட் செய்த போர்ஷனை தொகுத்து அதிலிருந்து ஒரு 60 நிமிட காட்சிகளை எடிட் செய்திருந்தார் வெற்றிமாறன். அதை தயாரிப்பாளரிடமும், சிம்புவிடமும் திரையிட்டு காண்பித்ததில் இருவரும் செம ஹேப்பி. சிலம்பரசனின் மூன்று கெட்டப்களில் இதுவரை இரண்டு கெட்டப்கள் மட்டுமே ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. படத்திற்கான பாடல்களை அனிருத் கொடுத்ததுடன், படப்பிடிப்பு தளத்திற்கு ஒருநாள் வருகை தந்து வெற்றிமாறனிடமும் சிம்புவிடமும் பேசிவிட்டு பறந்தார். படத்தின் ஸ்டண்ட்ஸ் குறித்து சமீபத்தில் பீட்டர் ஹெயின் மாஸ்டரும் அரசன் கிளைமாக்ஸை சொன்னால், புல்லரிக்குது எனச் சொல்லி சிலிர்த்தார். அப்படியொரு மிரட்டலான ஆக்ஷன் இருக்கிறது.

அரசன் - சிம்பு - வெற்றிமாறன்
அரசன் - சிம்பு - வெற்றிமாறன்

படத்தில் ஆன் தி போர்ட்டு என வரவேற்கப்பட்ட விஜய்சேதுபதி, இப்போது வரை அவரது போர்ஷன் படமாக்கப்படவில்லை என்பதால் படத்திலிருந்து அவர் விலகிவிட்டார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து விசாரிக்கையில் ``அப்படியெதுவும் இல்லை. விஜய் சேதுபதி நடிப்பது உறுதி. அவரது போர்ஷனை நவம்பரில் தான் படமாக்க உள்ளனர். அவரது கதாபாத்திரம் சிறிய நேரமே வந்தாலும், மறக்கவே முடியாத ஒரு பாத்திரம் என்கின்றனர்.

சிம்பு, வெற்றிமாறன்

சரி விஷயத்திற்கு வருவோம். சிலம்பரசனின் ரசிர்களுக்கு இனிபான செய்தி இது தான். தீபாவளிக்கு அரசன் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகவிருக்கிறது. `The World of Arasan என்ற பெயரில் இந்த வீடியோ வெளியாகிறது. ஏற்கெனவே அரசன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் வெளியான வீடியோ, திரையரங்கில் ரிலீஸ் ஆனது போல, இதுவும் வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் தி வேர்ல்டு ஆஃப் அரசன் வீடியோவில் அரசனின் உலகம் என்ன? இந்த படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்.. எதுவரை படம் வளர்ந்திருக்கிறது. வடசென்னைக்கும் இதற்குமான தொடர்ப்பு என்ன இப்படி பல விஷயங்களை இந்த வீடியோவில் கொண்டு வருகின்றனர். அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் ஒரு பக்கம் கவனித்து வருகிறார் வெற்றிமாறன் என்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.