டெல்லியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்; இந்தியாவின் பதில் என்ன?
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எனப் பல்வேறு தரப்பினர் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தைத் தடுக்கப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை டெல்லி போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இதை எதிர்த்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், “டெல்லியில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாகவும் எவ்வித நிபந்தனையுமின்றியும் விடுதலை செய்ய வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தியா ஜனநாயக நாடு
இதற்கு இந்தியாவும் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “புதுடெல்லியில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்டுள்ள கருத்துகளை நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். இங்கு அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை எங்களது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதுடன், அது பாதுகாக்கப்படுகிறது.
எங்களது நீதிமன்றங்கள் உள்ளன...
அனைத்து ஜனநாயக நாடுகளையும் போலவே, இந்தியக் குடிமக்களும் பொது அமைதியின் நலன் கருதி, நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இந்த உரிமையைப் பயன்படுத்துகின்றனர்.
அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார்கள். மேலும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதற்குத் தீர்வு காண எங்களது நீதிமன்றங்கள் அனைவருக்கும் எப்போதும் திறந்தே இருக்கின்றன.
We have seen the OHCHR’s remarks about today’s events in New Delhi.
— India at UN, Geneva (@IndiaUNGeneva) October 10, 2026
India is the world’s largest democracy, where the right to peaceful assembly is guaranteed by our Constitution and safeguarded by robust institutions, an independent judiciary and a free media. As in every…
பிற இடங்களில் நடப்பதைப் பாருங்கள்...
எனவே, OHCHR அமைப்பின் கவலைகள் தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்தவை. மேலும் அவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிடுவதாகும்.
இந்தச் சூழலில், நடுநிலைமை மற்றும் பாரபட்சமற்ற தன்மையைக் கடைப்பிடிக்கும் தனது கடமைக்கு ஏற்ப, உலகின் பிற இடங்களில் நடைபெறும் பெரிய அளவிலான போராட்டங்கள் மீதும் OHCHR இதே போன்ற கவனத்தைச் செலுத்துவது நல்லது” என்று பதில் தரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

