கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்திற்காகப் பின்வாங்கும் ரஜினிகாந்தின் ‘தர்மன்’: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!

தமிழ் திரையுலகில் பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் உருவகி வரும் ‘தர்மன்’ (Dharman) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகநாயகன் கமல்ஹாசனின் (Kamal Haasan) பிரம்மாண்டமான ‘இந்தியன் 3’ (Indian 3) திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைய உள்ளதால், நண்பருக்காகத் தனது படத்தின் ரிலீஸை ரஜினிகாந்த் தள்ளிவைக்க யோசித்து வருகிறார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன் 3’ படத்தின் எஞ்சிய காட்சிகளுக்கான 15 நாள் படப்பிடிப்பை முடித்து, பொங்கல் 2027-ல் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே படப்பிடிப்பு முடிவடைந்த பகுதிகளுக்கான பின்னணிப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கமல்ஹாசனுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படம் பொங்கலுக்குத் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், 2027 ஏப்ரல் 7 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ‘வாரணாசி’ (Varanasi) திரைப்படம் சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ‘தர்மன்’ திரைப்படத்தை வரும் ஏப்ரல் 30, 2027 அன்று வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவின் மூலம் இரு பெரும் நட்சத்திரங்களின் படங்களும் தனித்தனியாகப் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


