Bigg Boss Tamil 10: எவிக்‌ஷனில் அரங்கேறிய கடைசி நேர ட்விஸ்ட்... நடந்தது என்ன?

முதல் நாளிலேயே எவிக்‌ஷன், எவிக்‌ஷனில் சென்றவர்கள் ரீ எண்ட்ரி, ஏகப்பட்ட வைல்டு கார்டு எண்ட்ரி என விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

முன்னதாக 19 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 6ம் தேதி நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் வழக்கமான வீக் எண்ட் எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் தற்போது பிக்பாஸ் செட்டில் நடைபெற்று வருகிறது.

ராகவ், சாந்தினி, ஷமா, முத்தழகி, முனியம்மா உள்ளிட்ட சிலர் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

இவர்களில் ஷமா எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வைத்திருக்கிறார்.

Bigg Boss Tamil 10

நமக்கு கிடைத்த தகவல்களின் படி மக்கள் வாக்குகள் என்கிற வகையில் ஷமா, சாந்தினி ஆகியோருக்குக் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

இன்னொபுறம், ராகவ், முத்தழகி ஆகியோருமே நிகழ்ச்சியில் ஏனோதானோவென்றுதான் விளையாடி வருவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது.

ஆரம்பம் முதலே இந்தச் சீசனில் அதிகம் பேசப்படும் போட்டியாளர் என்றால் முனியம்மாவைத்தான் கைகாட்டுகிறார்கள்.

லக்ஷ்மி பிரியா, ஜேசன், முனியம்மா என டைட்டில் வாய்ப்பிருப்பவர்களை இப்போதே வரிசைப்படுத்தத் தொடங்கி விட்டனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

சரி, இந்த வாரம் யார் எலிமினேட் ஆகிறார்கள் என்கிறீர்கள் தானே? அதில் பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லை என்பதுதான் அந்த ட்விஸ்ட்டாம்.

காரணம், அது இந்த நேரத்தில் பிக்பாஸ்க்கும் விஜய் சேதுபதிக்கும் மட்டுமே தெரியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.