இன்னும் கொஞ்சம் கைத்தட்டினால், ட்ரம்புடன் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்வேன்- நவநீதம் பிள்ளை கிண்டல்

கடந்த ஆண்டு, ‘நான் தான் தகுதியானவன். எனக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைத் தர வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்... அடம்பிடித்தார் என்றுகூடச் சொல்லலாம்.

நான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்... அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பதிவு செய்துக்கொண்டே இருந்தார்.

ஆனாலும், அவரது முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை.

நவநீதம் பிள்ளை

2025-ம் ஆண்டு நோபல் பரிசு...

கடந்த ஆண்டு, 2025-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ பெற்றார். ஆனால், அவருக்குக் கிடைத்த பரிசை ட்ரம்பிற்குச் சமர்ப்பிப்பதாகக் கூறி, ட்ரம்பிற்குக் கொஞ்சம் ஆறுதல் தந்தார்.

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அது தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை கையில் சேரப் போகிறது.

ட்ரம்புக்கு கொடுப்பேன்

நவநீதம் பிள்ளையைத் தொடர்பு கொள்ள முடியாததால், நோபல் பரிசுக் கமிட்டி அவரிடம் இந்த அறிவிப்பு குறித்து முன்பே கூறவில்லையாம்.

இன்று நடந்த அறிவிப்பிற்குப் பிறகுதான், நவநீதம் பிள்ளைக்குத் தெரிய வந்திருக்கிறது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நவநீதம், "மிகுந்த நன்றி. இன்னும் கொஞ்சம் கைத்தட்டினால், இந்தப் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வேன் (கேலியாக).

எனக்கு இது பற்றி முன்பு தெரியாது. இது உண்மைதானா என்பதுதான் என்னுடைய கேள்வி.

மக்கள் மனதார ஏற்றுக்கொண்டால் ஒழிய, எந்தவொரு விருதையோ பரிசையோ யாரும் பெற விரும்புவதில்லை. எனவே, உங்களின் இந்த அன்பான கிளாப்களை நான் மிகவும் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.