நடிகர் நானா படேகர் இறப்பு இயற்கையானது இல்லையா? கோவா போலீஸார் வழக்கு பதிவு

பாலிவுட் நடிகர் நானா படேகர் நேற்று காலை கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி கிடந்த நானா படேகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இதய துடிப்பை மீட்டெடுக்க டாக்டர்கள் 40 நிமிடம் போராடினர். ஆனால் அந்த முயற்சி பலனலிக்கவில்லை. இறந்து போன நானா படேகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு புனேயில் உள்ள அவரது ஊரில் இருக்கும் பண்ணை வீட்டில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் புதிய திருப்பமாக நடிகர் நானா படேகரின் மரணத்தை கோவா போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்துள்ளது. பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் பிரிவு 194 இன் கீழ் பனாஜி போலீஸாரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் தாக்கல் செய்து அறிக்கையில்,நானா படேகர் டோனா பவுலாவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மணிப்பால் மருத்துவமனையின் விபத்து வார்டுக்கு இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டார். மணிப்பால் மருத்துவமனை டாக்டர்கள் காலை 8.07 மணிக்கு போலீஸாரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து மணிப்பால் மருத்துவமனை வார்டில் நானா படேகர் வைக்கப்பட்டு இருந்த வார்டை போலீஸார் பார்வையிட்டார். இது குறித்து மருத்துவ அதிகாரியுடன் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பிஎன்எஸ்எஸ் பிரிவு 194ன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று போலீஸார் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதால் போலீஸ் அதிகாரி நிதின் நாயக் தலைமையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்த கூடுதல் விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். பிரேத பரிசோதனை முடிவு வெளியான பின்னரே வழக்கு பிரிவை போலீசார் மாற்றுவர்கள் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.