சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.

அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுர வேட்பாளர் சத்யபாமாவை பல்டி பாமா என்று கூறி, உருவக்கேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.

இது பல்வேறு தரப்பில் கண்டனங்களைக் கிளப்பியது.

சத்யபாமா

தற்போது ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தவெகவின் மகளிர் அணி திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், தில்லை நகர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளது.

இந்தப் புகாரை ஏற்று அந்தந்தக் காவல் நிலையங்களில் சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு, ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெகவின் வழக்கறிஞர் அணி தேர்தல் ஆணையம், டி.ஜி.பி, சென்னை காவல் ஆணையர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.