கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழும் தனுஷ் (Dhanush) மற்றும் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இருவரும், சமீபகாலமாகத் தங்களது திரைப்படத் தேர்வுகளில் செய்துவரும் அதிரடியான மாற்றங்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. வெவ்வேறு விதமான கதைக்களங்கள் மற்றும் பரிசோதனை முயற்சிகளில் கவனம் செலுத்தி வந்த இவர்கள், தற்போது தங்களது பலமான மற்றும் ரசிகர்களைத் திரையரங்குக்ளுக்குக் கொண்டுவரும் கமர்ஷியல் பாதைக்குத் (Commercial Track) மீண்டும் திரும்பியுள்ளனர்.
நடிகர் தனுஷைப் பொறுத்தவரை, ‘குபேரா’ மற்றும் ‘கர’ போன்ற பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்குப் பிறகு, தற்போது ரசிகர்களைக் கொண்டாடும் வகையிலான மாஸ் கமர்ஷியல் படங்களை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘OM’ (ஓம்), தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘D56’ மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘D57’ உள்ளிட்ட படங்கள் அவரது கமர்ஷியல் பலத்தை மீண்டும் நிரூபிக்கத் தயாராகி வருகின்றன.
இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் தனது முந்தைய படங்களின் கலவையான வரவேற்பைத் தொடர்ந்து, முற்றிலும் தன் ரசிகர்களை மகிழ்விக்கும் கமர்ஷியல் களத்திற்குத் திரும்பியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ‘SEYON’ (செயோன்), அதனைத் தொடர்ந்து ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ள ‘SK27’, ‘SK28’ ஆகிய திரைப்படங்கள் அவரது மாதான வணிக வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, இந்த இரண்டு ஆற்றல்மிக்க நட்சத்திரங்களும் தங்களது பழைய ஃபார்முக்குத் திரும்புவது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


