இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகில் புதிய படைப்பாளர்களின் வரவு தொடர்ச்சியாகக் கலக்கி வரும் நிலையில், இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘ஹைக்கூ’ (Haiku) திரையரங்குகளில் வெளியாவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் என்பதால் இப்படத்தின் மீது சினிமா வட்டாரத்தில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
View this post on Instagram
இசைமைப்பாளர் சித்து குமார் (ஆரோமலே புகழ்) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி அன்று கோலாகலமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான்-இந்திய அளவில் இப்படம் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது இதன் மற்றொரு சிறப்பு அம்சமாகும். வித்தியாசமான கதைக்களத்துடன் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய திரையனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


