காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று... மாரடைப்பு என நாடகமாடிய மனைவி - காட்டிகொடுத்த சாட்டிங்!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லோஹியா நகரில் வசித்து வந்தவர் தலிப்(30). இவரது மனைவி இல்மா(27). இவர் பியூட்டி பார்லரில் வேலை செய்கிறார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சம்பவத்தன்று வேலை முடிந்து திரும்பிய தலிப்பிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இல்மா தனது மூத்த சகோதரர் அக்ரமிடம் கூறினார்.

அவர் படுக்கையில் கொஞ்ச நேரம் படுத்திருந்ததாகவும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார் என்றும் தெரிவித்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி உறவினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர்.

பின்னர் உறவினர்கள் தலிப் மரணத்தில் சந்தேகிக்க தொடங்கினர். கடந்த ஒன்றாம் தேதி, தலிபின் உறவினர் ரைஸ் என்பவர் இல்மாவின் வீட்டிற்கு வந்தார். இல்மா தலிபின் மொபைலை மறைத்து வைத்திருந்தார். ஆனால் ரைஸ் அதை ஆடைகளுக்கு அடியில் கண்டுபிடித்தார்.

அதில் தலிப் மற்றும் அமன் என்பவருக்கு இடையேயான உரையாடல் தொலைபேசியில் காணப்பட்டது, அதில் தலிப் அமனை தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்தும்படி கூறி இருந்தார். இதையடுத்து குடும்பத்தினர் இது குறித்து இல்மாவிடம் விசாரித்தபோது, ​​இல்மா தனது கணவரைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். தலிப் தன்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாகவும், கடந்த மாதம் 28ம் தேதி இது போன்று தலிப் அடித்த பிறகு தனது காதலன் அமனை அழைத்தார். அமன் ஒரு நண்பருடன் வந்தார்.

அவர்கள் மூவரும் தலிபை அடித்தனர். பின்னர் அமன் தலிப்பை கழுத்தை நெரித்து கொன்றார். அமன் பின்னர் இல்மாவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் தலிப் உடலை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். இல்மாவை கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.