CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம் - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி), ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி மும்பையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய சிஜேபி தொண்டர்கள், மாணவர் அமைப்பினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிஜேபி செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், " அரசாங்கம் என்னையும், அபிஜீத், அஷுதோஷ் , ரத்னா மற்றும் பிற காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்களையும் கைது செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகள் பலனளிக்கும் என்று அரசாங்கம் நினைத்தால், அது அவர்களின் தவறு! இளம் தலைமுறை விழித்துக்கொண்டுள்ளது.
நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமது உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் தொடர்ந்து போராடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

சிறைவாசத்தையோ அல்லது அதைவிட மோசமான சூழலையோ எதிர்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.
போராட்டங்கள் தொடர வேண்டும். அக்டோபர் 10-ஆம் தேதி முதல் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடிப் போராடுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


