பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா? – ஸ்டாலினுக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரானவை என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெண்கள் அரசியல் களத்திற்கு வருவது கேலிக்குள்ளாவதற்காக அல்ல, மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியாற்றுவதற்காக. தேர்தல் களத்தில் ஒரு பெண் வேட்பாளரை அவரது கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால், அவரது தோற்றத்தையும் உருவத்தையும் கேலி செய்து தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் விமர்சனம் என்பது கருத்துக்கு எதிரான கருத்தாக இருக்க வேண்டும்; ஒரு பெண்ணின் உருவத்திற்கு எதிரான கேலியாக இருக்கக் கூடாது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண்களின் கண்ணியத்தையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது.
குறிப்பாக, நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களே இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பது, அரசியல் களத்தில் பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய மரியாதை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. மூத்த அரசியல் தலைவரான மு.க.ஸ்டாலினே ஒரு பெண் வேட்பாளரை அவரது தோற்றத்தை முன்வைத்து கேலி செய்யும் வகையில் பேசினால், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களிடமிருந்து பெண்களுக்கு எவ்வாறு மரியாதையை எதிர்பார்க்க முடியும்?
பெண்களின் கண்ணியத்தை வாக்கு அரசியலுக்காகப் பலிகடா ஆக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய தலைவர்கள் அவர்களது தோற்றத்தை வைத்து கேலி செய்வது மிகவும் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


