LPG மானியம் தொடர வேண்டுமா? வட்டி விகிதம் மாறுகிறதா? - அக்டோபர் 2026-ன் முக்கிய நிதி மாற்றங்கள்!

நாளை அக்டோபர் 1-ம் தேதி.

நாளை முதல் இந்தியாவில் கவனிக்க வேண்டிய... அமலாக உள்ள முக்கிய நிதி விஷயங்களை இங்கே காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி மீட்டிங்

இந்தியாவின் தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம் ஆகும்.

வருகிற அக்டோபர் 5-7 தேதிகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்கிற எதிர்பார்ப்பும் சந்தையில் உண்டு.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

SBI ஏ.டி.எம் கட்டணம்

எஸ்.பி.ஐ சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்கள் பிற வங்கி ஏ.டி.எம்களைப் பணம் எடுப்பதற்கு, இதர சேவைகளுக்குப் பயன்படுத்தும் போது, இலவச சேவை இனி 5 முறை மட்டுமே கிடைக்கும்.

முன்பு, 10 முறையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.பி.ஜி மானியம் வேண்டுமா?

இந்தியாவில் எல்.பி.ஜி சிலிண்டர்களுக்குச் சில மானியங்கள் உண்டு. மானியத்தைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் அப்டேட் கட்டாயம் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், இனி எந்த மானியமும் இன்றி, சந்தை விலைக்குத்தான் சிலிண்டர் கிடைக்கும்.

இனி ரூ.2,000-க்கு மேலான UPI-க்கு MDR!

கடைகள், பிசினஸ்களுக்கு ரூ.2,000-க்கு மேல் செய்யும் யு.பி.ஐ பேமென்டுகளுக்கு அக்டோபர் 15-ம் தேதி முதல் 0.4 சதவிகித எம்.டி.ஆர் கட்டணம் வசூலிக்கப்படும்.

இது குறித்த முழுத் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளவும்.

மாறுமா சிறு சேமிப்புகளின் வட்டிகள்?

PPF, NSC, SCSS, சுகன்யா சம்ரித்தி, KVP போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான அக்டோபர் - டிசம்பர் காலாண்டு வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளன.

வட்டி விகிதம்
வட்டி விகிதம்

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிக் கணக்குத் தாக்கல் நீட்டிப்பு!

வரித் தணிக்கை அறிக்கைக்கான கடைசித் தேதி செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து அக்டோபர் 21-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வருமான வரிக் கணக்குத் தாக்கலும் அக்டோபர் 31-ம் தேதியிலிருந்து நவம்பர் 21-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.