தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதற்கட்ட தங்க மோதிரங்களை தயாரித்து வழங்கிய ஜோய் ஆலுக்காஸ்!

தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 89,955 ஒரு கிராம் (22 கேரட்) தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் குரூப் வெற்றிகரமாக தயாரித்து முடித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.41 லட்சம் புதிதாகப் பிறந்த பெற்ற குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கான குறைந்த விலைப்புள்ளி கோருநர் தங்கம் விலையைத் தவிர்த்து, மோதிரங்கள் செய்கூலி, BIS ஹால்மார்க் முத்திரை, காப்பீடு, போக்குவரத்து மற்றும் பேக்கிங் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து வெறும் ‘ஒரு பைசாவை’ மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டு ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் கோரிய L1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது.

தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம்

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள முதற்கட்ட 89,955 தங்க மோதிரங்கள், முதன்மையாக அதிகப் பிரசவங்கள் நடைபெறும் 107 குறிப்பிட்ட அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த மோதிரங்கள் அனைத்தும் அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை மற்றும் 22 கேரட் தூய்மைத் தரத்தின்படி துல்லியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS ஹால்மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எண்ணும் முத்திரைகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பேக்கிங்கில் இந்த மோதிரங்கள் அடைக்கப்பட்டு, அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முதற்கட்ட மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஜோயாலுக்காஸின் பிரத்யேக மையங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில்:

"மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய உன்னதமான ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்’ ஜோய்ஆலுக்காஸ் இணைந்திருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். ஒரு குழந்தையின் பிறப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணமாகும்.

தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம்

நமது பாரம்பரியத்தில் தங்கம் என்பது எப்போதும் ஆசிர்வாதம் மற்றும் மங்களகரமான தொடக்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்துள்ளனர். இந்த உன்னதமான திட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது," என்றார்.

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ஷோரூம்களுடன் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ள ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம், தமிழகக் குடும்பங்களால் அன்போடு "ராசியான கடை" என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.