முதியோர் இல்லத்தில் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.. ரசிகர்கள் அதிர்ச்சி..

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, தானே பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில் பேசும்போது சற்று சிரமப்பட்டு காணப்பட்டார். 

 

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த 54 வயதான காம்ப்ளி, தான் தங்கியிருக்கும் பராமரிப்பு மையத்தின் வசதிகளையும், அங்கு தனக்கு கிடைக்கும் கவனிப்பையும் அந்த வீடியோவில் பாராட்டியுள்ளார். 

 

நான் இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன், இங்குள்ள வசதிகள் மிகவும் அருமையாக உள்ளன. நான் வீட்டை விட்டு இருப்பது போன்ற உணர்வே எனக்கு இல்லை, இங்குள்ளவர்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.  

 

 முன்னதாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மூளையில் ரத்தக்கட்டு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த காம்ப்ளியின் தற்போதைய நிலை அவரது ரசிகர்களைக் கவலைக்குள்ளாக்கியிருந்தாலும், இந்த வீடியோ மூலம் அவர் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

 

1991 முதல் 2000 வரை இந்தியாவின் திறமையான இடதுகை பேட்ஸ்மேனாகத் திகழ்ந்த காம்ப்ளி, 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.